596 சதவிகித வருமானத்தை வாரி வழங்கியது மல்டிபேக்கர்... சபாஷ் போட வைத்த சர்வோடெக்!

 
சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் சோலார் பவர்

சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் LED லைட்டிங் தீர்வுகள், UPS (தடையற்ற மின்சாரம்) அமைப்புகள், இன்வெர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது. அதன் தயாரிப்புகளில் மின்சார வாகன சார்ஜர்கள் மற்றும் சோலார் இன்வெர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஆகியவையும் அடங்கும்.

என்எஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனம், அதன் இயக்குநர்கள் குழுகூட்டத்தில்  1:2 என்ற விகிதத்தில் அதன் பங்கு பங்குகளின் துணைப்பிரிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனவே, ரூபாய் 2 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்கும் ரூபாய் ஒன்று முகமதிப்பு கொண்ட இரண்டு பங்குகளாகப் பிரிக்கப்படும். நிறுவனம் அதன் பங்குப் பிரிப்ப அறிவிப்பை அறிவித்ததையடுத்து நேற்று வெள்ளிக்கிழமையன்று நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகின. தேசிய பங்குச் சந்தையில் (NSE)யில் ஒவ்வொன்றும் ரூபாய்  93.05க்கு நிலை பெற்றன.

சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் சோலார் பவர் பல்பு

நிறுவனத்தின் பங்குகளின் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதும், பங்குச் சந்தையில் பரந்த பங்கேற்பை ஊக்குவிப்பதும்தான் பிரிவிற்கு பின் உள்ள காரணம் என்று தெரிகிறது. இப்பங்கின் விலை ரூபாய்  13.37ல் இருந்து ரூபாய் 93.05 ஆக அதிகரித்து கடந்த ஆண்டில் மல்டிபேக்கர் வருமானத்தை அதாவது 596 சதவிகிதத்தை வழங்கியுள்ளது. ஒரு முதலீட்டாளர் ஒரு வருடத்திற்கு முன்பு இந்நிறுவனத்தின் பங்குகளில் ரூபாய் 1 லட்சத்தை முதலீடு செய்திருந்தால், அவர்களின் பங்குகளின் இன்றைய மதிப்பு ரூபாய் 6.96 லட்சமாக இருந்திருக்கும் !

2022–23 நிதியாண்டின் (Q4FY23) மார்ச் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் பல மடங்கு அதிகரித்து ரூபாய் 6.05 கோடியாக இருந்தது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூபாய்  1.3 கோடியுடன் ஒப்பிடும்போது. அதன் வருவாய் Q4FY23ல் ரூபாய் 120 கோடியாக உயர்ந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் ரூபாய்  51.10 கோடியாக இருந்தது.

சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் சோலார் பவர் பல்பு

முழு ஆண்டிலும் (FY23), அதன் லாபம் முந்தைய ஆண்டில் (FY22) ரூபாய் 4.05 கோடியிலிருந்து ரூபாய் 11.06 கோடியாக உயர்ந்துள்ளது. FY22ல் 144.25 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய் FY23ல் கிட்டத்தட்ட இரு மடங்காகி 278.64 கோடியாக அதிகரித்துள்ளது.

சந்தை மூலதனம் ரூபாய் 943 கோடியுடன், சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் ஒரு ஸ்மால் கேப் ஸ்டாக் ஆகும். 0.51 என்ற சிறந்த கடன்-பங்கு விகிதத்தைக் கொண்டுள்ளது. அதன் பங்குகள் 83.95 என்ற விலை-வருமான விகிதத்தில் (P/E) வர்த்தகம் செய்யப்பட்டன.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web