மும்பை கோர விபத்து.. 2 நாட்களாக காரில் பிணமாக இருந்த விமான நிலைய முன்னாள் ஊழியர்!

 
மனோஜ் - அனிதா

மும்பையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றினால் பெட்ரோல் பம்ப் மீது ராட்சத விளம்பர பலகை விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெட்ரோல் பங்க் மீது விளம்பரப் பலகை விழுந்ததால் மீட்புப் பணிகள் தாமதமானது. பெட்ரோல் டேங்கை கேஸ் கட்டர் மூலம் வெட்டி எடுத்தால் தீப்பிடித்து எரியும் அபாயம் இருந்தது. இதனால், மீட்புப் பணிகள் மந்தமடைந்தன. நேற்றிரவு சம்பவ இடத்தில் இருந்து கார் ஒன்று மீட்கப்பட்டு, அதனை சோதனையிட்ட போது, அதற்குள் வயோதிப தம்பதியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் மனோஜ் (60), அனிதா.

மனோஜ் மும்பை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு ஜபல்பூர் சென்றார். இருவரும் ஏதோ வேலையாக மும்பை வந்திருந்தனர். மும்பையில் பணியை முடித்துக் கொண்டு காரில் ஜபல்பூருக்கு புறப்பட்டனர். மும்பையில் இருந்து புறப்பட்டு காட்கோபர் பெட்ரோல் பம்பில் பெட்ரோல் நிரப்ப சென்றபோது, அவர்களின் கார் மீது விளம்பர பலகை விழுந்தது.

மனோஜின் மகன் அமெரிக்காவில் இருக்கிறான். தந்தைக்கு போன் செய்த போது லைன் கிடைக்கவில்லை. இதனால் மும்பையில் உள்ள தனது நண்பருக்கு போன் செய்து தந்தை போனை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். அந்த நபர் உடனடியாக போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், கடைசியாக விபத்து நடந்த பெட்ரோல் பம்ப் அருகே மனோஜ் தம்பதியரின் போன் இருந்தது தெரியவந்தது. உடனே மனோஜின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெட்ரோல் பங்க் அருகே மீட்புப் பணிக்கு வந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த காரில் இருந்த இரும்பு தூண்களை அகற்றி சோதனை செய்தபோது, உள்ளே இருவரும் இறந்து கிடந்தனர். 250 டன் மதிப்புள்ள விளம்பர பலகை விழுந்ததில் பெட்ரோல் பம்ப் கடுமையாக சேதமடைந்தது. விழுந்து கிடக்கும் விளம்பர பலகை நிலையாக உள்ளதாக சான்றிதழ் அளித்த பொறியாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web