மும்பை பயங்கர விபத்து விவகாரம்.. பிரபல விளம்பர நிறுவனருக்கு வலைவீச்சு!

 
பாவேஷ் பிண்டே

14 பேரைக் கொன்ற மும்பை சம்பவத்துடன் தொடர்புடைய விளம்பர பேனர் நிறுவனர் மீது 24 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பையின் காட்கோபரில் நேற்று பெய்த கனமழை மற்றும் புழுதிப் புயல் காரணமாக ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 74 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரமாண்ட விளம்பரப் பலகையை உருவாக்கிய ஈகோ மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் பாவேஷ் பிண்டே மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே பலாத்காரம் உட்பட 24 வழக்குகள் உள்ளன.

தற்போது தலைமறைவாக உள்ள பவேஷ் பிண்டே மீது இந்த ஆண்டு ஜனவரி மாதம் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் கடந்த 2009ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முலுண்ட் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web