பிச்சையெடுத்து போராட்டம் நடத்திய நகராட்சி அலுவலர்கள் ... பெரும் பரபரப்பு!!

 
தேனி

மாவட்டவாரியாக மாதம் தோறும் நகராட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று நவம்பர் 7ம் தேதி செவ்வாய்க்கிழமை தேனி நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாதாந்திர நகர் மன்ற கூட்டம் தலைவர் ரேணுகா பிரியா பாலமுருகன் தலைமையில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில்  33 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த 6 கவுன்சிலர்கள், தங்கள் பகுதியில் எந்த திட்டமும் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.  

தேனி

மேலும்  அவர்கள் நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த நகராட்சியில் நிதி இல்லை என காரணம் கூறப்பட்டது. அதற்கு   பொதுமக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்த முடியவில்லை எனக் கூறி, பொதுமக்களே பிச்சை இடுங்கள் என்று முழக்கங்களை எழுப்பி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தேனி


 நகர்மன்ற தலைவர் ரேணுகா பிரியா,  போராட்டத்தில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்களிடம், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் கூட்ட அரங்கில் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என சமாதானம்  கூறி அழைத்து சென்றார். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web