கொலைவெறி தாக்குதல்... 4 அதிகாரிகள் ஐசியூவில் சிகிச்சை... சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி!

 
செந்தில்பாலாஜி

வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உட்பட 5 அதிகாரிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டிலும், அவருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களிலும் நேற்று வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினார்கள். முன்னதாக சோதனையிட சென்ற அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் திமுக தொண்டர்கள், அமைச்சரின் ஆதரவாளர்கள் குவிந்ததில் அடி தடி சண்டைகள் உருவானது. வருமான வரித்துறை அதிகாரிகளின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு, அந்த பகுதி முழுவதும் பரபரப்புக்குள்ளானது.

அவசர சிகிச்சை பிரிவு

சென்னை ,கரூர் , பெங்களூரு , ஹைதராபாத்  நகரங்களில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான  இடங்களில் சோதனை நடத்த சென்ற அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் திமுக தொண்டர்கள்  தடுத்து நிறுத்தினார்கள். இந்நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

செந்தில் பாலாஜி

8 வாகனங்களில் சென்றிருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்லையில், திமுகவினர் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உட்பட 4 அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web