‘அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம்’ - செங்கோட்டையன் பேட்டி!

 
செங்கோட்டையன்

அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இன்றுடன் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு நிறைவடைந்த நிலையில், ஈரோட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செங்கோட்டையன்

அப்போது பேசிய அவர், “அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது நோக்கம். அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே மனம் திறந்து பேசினேன். தொண்டர்கள், மக்களின் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

செங்கோட்டையன்

அண்ணாவின் பெயரால் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா கட்டிக் காத்தார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார். எனவே, மறப்போம், மன்னிப்போம். அதிமுக ஒன்றிணையும் விவகாரம் குறித்து புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க கடமைப்பட்டிருக்கிறேன். 2026-ல் அதிமுக ஆட்சி மலர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?