எங்க சாவுக்கு சகோதரர் தான் காரணம்... உள்ளங்கையில் எழுதி விட்டு கணவன், மனைவி,மகன் தற்கொலை!

 
சீமா

 மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில்  பீகா காலனியில் வசித்து வரும் தம்பதி 47 வயது  நரேந்திர சிங் சௌஹான் , 41 வயது  சீமா சௌஹான்   இவர்களுடைய மகன் 22 வயது ஆதித்யா.  நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர்களுடைய குடும்பத்தில் கடந்த 10 ஆண்டுகளாக  சமையல்காரராக பணியாற்றிய சந்தோஷ்   இரவு சமைத்து முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆம்புலன்ஸ்

அதன் பின் மறுநாள் வழக்கம்போல் வேலைக்கு வந்தார்.  அழைப்பு மணிக்கு நரேந்திர சிங் பதில் அளிக்கவில்லை. மொபைலில் கால் செய்து எடுக்கவில்லை.  இதனால் சந்தேகமடைந்த சந்தோஷ், அவரது தங்கைக்கு போன் செய்து தகவல் கூறினார். இருவரும் சேர்ந்து வந்து  வீட்டின்  கதவைத் திறந்து பார்த்தபோது 3 பேரும் உயிரிழந்து  கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர்  3 பேரின்  உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உத்தரபிரதேச போலீஸ்

அப்போது சீமாவின் உள்ளங்கையில் “எங்கள் இறப்புக்கு என் சகோதரர் தான் காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் முதல் கட்ட விசாரணையில், அரசு ஊழியர் முதலில் தனது மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக கூறுகின்றனர்.  நரேந்திரனுக்கும், அவருடைய மைத்துனருக்கும் இடையே அடிக்கடி தகராறும் இருந்து வந்துள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில் மன அழுத்தம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web