’பிரதமரின் முதன்மை செயலாளர் தான் என் அப்பா’.. தொழிலதிபர்களிடம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது!

 
ரன்சிதா அபிலிப்ஷா

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ராவின் மகள் மற்றும் மருமகன் என வேடமணிந்த தம்பதியை ஒடிசா போலீஸார் கைது செய்தனர். இந்த ஜொடி பல தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். சுரங்க உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  38 வயதான ரன்சிதா அபிலிப்ஷா மற்றும் அவரது கணவர் அனில் மொஹந்தி ஆகியோர் ஒடிசாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி வருகின்றனர்.

"மோசடி தம்பதி' புவனேஸ்வர் நகரில் அலுவலகம் நடத்தி வந்தனர். பல முக்கிய அரசு அதிகாரிகளுடன் தங்களுடைய புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் உருவாக்கி, இந்த புகைப்படங்களை காட்டி, பல அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அரசு டெண்டர்களை பெற்று தருவதாகவும் கூறி பல தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளனர்," என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் தம்பதியினால் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து புகார் அளிக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web