கடுப்பேத்தறாங்க மை லார்ட்... பிக் பாஸ் வீட்டிலிருந்து பெட்டி, படுக்கையோடு கிளம்பும் கூல் சுரேஷ்!

 
கூல் சுரேஷ்

பிக் பாஸ்7 தமிழ் வீட்டை விட்டு கூல் சுரேஷ் வெளியேறும் வகையிலான புரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ்7 தமிழ் வீட்டை விட்டு கூல் சுரேஷ் பெட்டி படுக்கையோடு கோபமாக வெளியேறி இருக்கிறார். தினேஷ் மற்றும் பிரதீப், பூர்ணிமா இடையே கடும் வாக்குவாதங்கள் வந்தன. மேலும் அர்ச்சனா, மாயா இடையே சில பிரச்சனைகள் வந்தது. இதில் அர்ச்சனா சற்று மனம் உடைந்துபோய் கண்கலங்கினார்.

அத்துடன் நேற்றைய நாள் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், இன்றைய பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கான புரோமோ வந்துள்ளது. அதன்படி, 'அசைஞ்சா போச்சு’ என்ற டாஸ்க் நடக்கிறது. இதில் ஹவுஸ் மேட்ஸ் தலையில் பெல் கட்டி விடப்படுகிறது. இது அசையாமல் ஃப்ரீஸ் ஆக வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில் பிரதீப்புக்கும் கூல் சுரேஷூக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடக்கிறது.

கூல் சுரேஷ்

பிரதீப் வழக்கம் போல, ’நேர்மையாக விளையாடிட்டு இருக்கேன். என்னை சீண்டாதீர்கள். நான் அப்படித்தான் பேசுவேன்’ என கூல் சுரேஷிடம் சண்டைக்கு எகிறுகிறார். இந்த நிலையில், விடாமல் பிரதீப் கத்திக் கொண்டிருக்க, ’நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்’ என கூல் சுரேஷ் பெட்டி படுக்கையோடு பிக் பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறும் வகையிலான பரபரப்பான புரோமோ வெளியாகி இருக்கிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web