என் லவ்வருக்கு கல்யாணம்... திருமண மண்டபத்தில் ரகளை செய்த காதலன்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள்... ஆனால், காதலுக்கு புரிதலும், பொறுமையும் கூட கிடையாது என்று சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார்கள் தக்கலை பகுதியில் வசிக்கும் மக்கள்... தான் காதலித்து வருவதாகவும், தனது காதலனையே கல்யாணம் செய்து கொள்வதாகவும் அடம் பிடித்து மெளன போராட்டம் நடத்தி வந்த மகளின் காதல்... திருமண மண்டபத்தில் ஊர், உறவினர்கள் எல்லாம் கூடியிருக்கும் போது வெட்ட வெளிச்சமாகியதே என்கிற கவலைப் பெற்றோருக்கு.
வீட்டில், உறவினரின் கல்யாணத்திற்கு வர மறுத்த மகளை கட்டாயப்படுத்தி, குடும்பத்தோடு அழைத்து சென்றுள்ளனர். உறவினர்கள் சூழ்ந்திருக்க, செல்போனை அணைத்து வைத்திருக்கிறாள். தன்னுடைய காதலி செல்போனை எடுத்து பேசவில்லை. தொடர்பு கொள்ளும் போதெல்லாம் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. தனது காதலி போனை எடுக்காமல், வழக்கமாக சந்திக்கவும் வராமல் இருக்கவே வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீடு பூட்டியிருந்தது காதலன் சபினுக்கு கலவரத்தை ஏற்படுத்தியது.
அக்கம் பக்கத்து வீட்டில் விசாரிக்கையில் குடும்பத்தோடு திருமணத்திற்கு சென்றிருப்பதாக கூறப்பட்ட தகவலை, தன்னுடைய காதலிக்கு தான் திருமணம் என்று அரைகுறையாக கேள்விப்பட்டு, திருமண மண்டபத்துக்கு நிறை போதையில் சென்ற காதலன், ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில், திருமணம் காதலியின் உறவுக்கார பெண்ணுக்கு என்ற விஷயம் தெரிய வந்ததும், நிம்மதியடைந்தார். தன்னுடைய மகளின் திருமணத்தில் வாலிபர் ஒருவர் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டதால், மணப்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசித்து வருபவர் சபின். அதே பகுதியில் டெம்போ வேன் ஓட்டி வரும் சபின், அந்த பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். வேன் டிரைவரைக் காதலிப்பதற்கு பெண்ணின் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சபினின் காதலியின் உறவுக்கார பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. திருமணத்திற்கு சபினின் காதலியும் சென்றுள்ளார். திருமண வீடு என்பதாலும், பெற்றோர் உடனிருந்ததாலும் சபினின் காதலி செல்போனை ஆஃப் செய்து வைத்துள்ளார். சொந்த பந்தங்கள் மண்டபத்தில் குழுமி இருந்தனர். அப்போது போதையில் தள்ளாடியபடியே சபின் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து, தனது காதலிக்கு தான் ரகசியமாக தனக்கு தெரியாமல் அவசர அவசரமாக திருமணம் ஏற்பாடுகள் நடைப்பெறுவதாக நினைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர், தனது காதலியின் பெற்றோரிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போதையில் எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காமல் சபின் தொடர்ந்து ரகளையில் ஈடுபட, வேறு வழியில்லாமல் மணப்பெண்ணின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சபினை எச்சரித்தனர்.
அதன் பின்னரும், அடங்காமல் போலீசாரிடமும் போதை தலைக்கேறிய நிலையில் சபீன்வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணின் பெற்றோர் போலீசாரிடம் புகாரளித்த நிலையில், சபின் மீது வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சபினைக் கைது செய்தனர்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!