“என் மகன் இறந்துட்டான்’ நடிகை த்ரிஷா கண்ணீர் பதிவு... ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை திரிஷாவின் வளர்ப்பு நாய் ஜோரோ இன்று அதிகாலை இறந்த நிலையில், ‘என் மகன் இறந்து விட்டான்’ என்று நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
— Trish (@trishtrashers) December 25, 2024
பிராணிகளின் மீது அதிகளவு பாசம் வைத்துள்ள நடிகை த்ரிஷா, ஓய்வு நேரங்களில் தனது செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருவார்.

பல சமயங்களில் தெருநாய்களை தத்தெடுக்கும்படி தனது ரசிகர்களையும் ஊக்குவித்து வரும் நடிகை த்ரிஷா, ப்ளூ கிராஸ் போன்ற அமைப்புகளுடனும் இணைந்து சேவை புரிந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் தனது வளர்ப்பு நாய் ஜோரோ இறந்துவிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா அதில், “எனது மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் உயிரிழந்தான். இனிமேல் என் வாழ்க்கை பூஜ்ஜியம் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். நானும், எனது குடும்பமும் அதிர்ச்சியில் உடைந்துபோயுள்ளோம். சிறிதுகாலம் பணியில் இருந்து விலகியிருக்க உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் பலரும் த்ரிஷாவுக்கு ஆறுதல் தெரிவித்து மீண்டு வர பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
