பாமகவை விட இரண்டு மடங்கு வாக்கு சதவீதம் பெற்ற நாம் தமிழர் கட்சி!!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே களமிறங்கி பண பலம் எதுவும் இல்லாமல், பிரபலமில்லாத சாதாரணமான வாக்காளர்கள் என்று எதிர்கட்சிகள் ஏளனம் செய்து பரிதாபமாக பார்த்த நிலையிலும், கடைசி நேரத்தில் சின்னத்தையும் இழந்து, புது சின்னத்தில் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் வெற்றி / தோல்வியை நிர்ணயிக்கும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், தர்மபுரி என்று பல முக்கிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாங்கிய வாக்குகளை விட, வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
இரண்டு இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளியிருக்கிறது. 2 இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸையும், பாஜக, பாமக, அ.ம.மு.க போன்ற கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி 3ம் இடத்தைப் பிடித்துள்ளது நாம் தமிழர் கட்சி.
இதில், பாமக வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி இரண்டு மடங்கு அதிக வாக்கு சதவீதத்தை இந்த தேர்தலில் பெற்று, முதல் முறையாக மாநில அங்கீகாரத்தைப் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.22% பெற்றுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!