நாம் தமிழர் கட்சிக்கு விஜய் ஆதரவு... தேர்தல் களத்தில் இறங்கும் விஜய் ரசிகர்கள்!

 
விஜய் சீமான்

 தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ளன. நாம் தமிழர் தனித்து நின்று களம் காண்கிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய் மறைமுக ஆதரவை தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார். இளையதளபதி விஜய் சமீபத்தில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். இந்த படத்தில்  விஜய் பாடிய விசில் போடு என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலில் முழுக்க முழுக்க விஜய் அரசியல் வருகை குறித்த வரிகள் தான். இந்தப்பாடல் தற்போது வைரலாகி வரும் நிலையில்  இந்த பாடல் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

விஜய் வெற்றிக் கழகம்


இது குறித்து திருச்சியில் பேசிய சாட்டை துரை முருகன் 'இந்த மக்களவை தேர்தலில் பிற தேர்தல்களை விட இளைஞர்கள், படித்தவர்களை காட்டிலும் பெரியவர்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் உள்ளது. 50 வயதை கடந்தவர்களின் ஆதரவு அபரிமிதமாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாம் தமிழர் கட்சிக்கு மறைமுகமான ஆதரவை கொடுத்துள்ளார்.  கோட் படத்தின் பாடலில்  campaign தொடங்கி மைக்கைப்பிடி என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.  அந்த காட்சியில் மைக்கை வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் மைக் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும்,  மறைமுக ஆதரவு தரவும் தான் இப்படி படமாக்கப்பட்டுள்ளது. மைக்கை வைத்தால் அது நாம் தமிழர் கட்சியைத்தான் சென்றடையும் என விஜய்க்கு தெரியும். ஆனால் இதுகுறித்து விஜய்யின், 'தவெக' கட்சி எந்தவிதமான பதிலையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான்
சீமான் மற்றும் விஜய்யின் கொள்கைகளில் பெரிய அளவில் வேறுபாடில்லை.  அடிப்படை அரசியல் மாற்றம் என்பது 2 கட்சிக்குமே பொது தான்.   இனி விஜய் எடுத்து வைக்கப்போகிற பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளிலும் தான் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுத்து போகிறார் என்பது விரிவாகத்  தெரிய வரும்.
நாம் தமிழர் கட்சிக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இப்போது வரை எந்தவித கருத்து முரண்பாடும் இல்லை. விஜய்யின் அரசியல் வருகையை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். தமிழகத்தின் அடுத்த  சூப்பர் ஸ்டாராக திகழக்கூடியவர், ரூ.150 கோடி சம்பளம் பெறுபவர், இந்தியா முழுக்க தெரிந்த பான் இந்தியா ஸ்டார் எல்லாவற்றையும் விட்டுவிட்டு  அரசியலுக்கு வருகிறார். 2026ல்  2 கட்சிகளும் இணைவதற்கான பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளன.  தனித்தனியாக நின்றாலும் கூட கொள்கை காரணமாக  ஒரே பாதையில் பயணிக்கும் வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web