திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் சீமான் ஆஜர்!
Dec 19, 2024, 13:25 IST
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி நீதிமன்றத்தில் இன்று காலை நேரில் ஆஜரானார்.
கடந்த 2018ல் திருச்சி விமான நிலையத்தில் சீமான் சென்றிருந்த போது நாம் தமிழர் கட்சியினருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை (மதிமுக) சேர்ந்த கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்த மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மோதல் வழக்கு குறித்த விசாரணைக்காக இன்று காலை திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதம் 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web