நாகை டூ இலங்கை.. மீண்டும் தொடங்கிய கப்பல் சேவை!

 
நாகை கப்பல்

நாகையில் இருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் படகு சேவையை கடந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த படகு சேவை நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செரியபாணி என்ற பெயரில் இயக்கப்பட்டது. இந்த 'செரியபாணி' என்ற பயணிகள் கப்பல், நாகையில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு 3 மணி நேரத்தில் சென்றடையும். ஒரு பயணி 50 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 13ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சிவகங்கை என்ற புதிய கப்பல் செல்ல உள்ளது. இந்த பிரமாண்ட பயணிகள் கப்பல் கீழ் தளத்தில் 133 இருக்கைகள் மற்றும் மேல் தளத்தில் 25 இருக்கைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ் அடுக்கு இருக்கைகளுக்கு ரூ.5000 மற்றும் ஜிஎஸ்டி மற்றும் மேல் அடுக்கு சிறப்பு வகுப்பிற்கு ரூ 7000 வரை வசூலிக்கப்படுகிறது. 

அந்தமானில் தயாரான சிவகங்கை பயணிகள் படகு மே 10ம் தேதி நாகை துறைமுகம் வருகிறது.இந்தியர்களுக்கு விசா இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டும் போதுமானது. நாகை-காங்கேசன் இடையே நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web