திருமணத்திற்கு தயாராகும் நாகசைதன்யா... நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதல்?!

 
நாக சைதன்யா
நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்ததி. இந்நிலையில், நாகசைதன்யாவும், நடிகை  சோபிதாவும் காதலித்து வருவதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை சோபிதா துலிபாலா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், இருவரும் தங்களது காதலை அறிவித்து விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தெலுங்கு திரையுலகம் பரபரப்படைந்து இருக்கிறது.

நாக சைதன்யா
 நாக சைதன்யாவும், நடிகை சோபிதாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டன் ஹோட்டலில் ஒன்றாக சுற்றித் திரிந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கினார்கள். அதன் பின்னர், நாக சைதன்யா காட்டுக்குள் சுற்றுலா செல்வது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், நடிகை சோபிதாவும் காட்டுக்குள் ஜீப்பில் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்த படங்களை சேர்த்து வைத்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் சுற்றி வருகிறார்கள் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 
விஷயம் இதோடு முடியாமல் கேன்ஸ் விழாவில் பங்குபெற சென்ற நடிகை சோபிதா, நடிகர் நாக சைதன்யாவுடன் ஐரோப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும் தகவல் வெளியானதால், இருவரும் திருமணத்திற்கு தயாராகி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web