‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்... முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் சென்னை, மயிலாப்பூர், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த முகாம்களில் இலவச முழு உடல் பரிசோதனைகள், 17 சிறப்பு மருத்துவ சேவைகள், மற்றும் 30 நோயறிதல் பரிசோதனைகள் (இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீரக செயல்பாடு போன்றவை) வழங்கப்படும்.
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்கள். pic.twitter.com/5lApSthQyS
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 2, 2025
ஒரு முகாமுக்கு ரூ 75,000 செலவில், மொத்தம்ரூ .13.58 கோடி செலவாகும், இதில் ரூ 9.42 கோடி தேசிய சுகாதார திட்டம் மற்றும் முதல்வரின் காப்பீட்டு திட்டத்திலிருந்து பெறப்படும்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும், எவ்வித கட்டணமுமின்றி, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை முகாம்களில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். 1256 உயர்தர மருத்துவ மையங்கள் மூலம், 17 சிறப்பு மருத்துவ துறைகளின் கீழ், கட்டணமின்றி மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளன.
ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1,164 முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம். 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்கள்.10 லட்சம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்கள் நடத்தப்படும்.இத்திட்டம் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தின் விரிவாக்கமாக, மக்களைத் தேடி மருத்துவ சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இலவச பரிசோதனைகளை எளிதாக்குகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
