இது தேர்தலே இல்லை... திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர்; நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா குற்றச்சாட்டு!
“இது தேர்தலே இல்லை... திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர் ” என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா குற்றம் சாட்டியுள்ளார்.விக்கிரவாண்டியில் திமுக 60 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, “நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரைக் கேளுங்கள்.

கடந்த தேர்தலைவிட கூடுதலாக நாங்கள் 2 ஆயிரம் வாக்கு பெற்றுள்ளோம். காணை பகுதியில் திமுகவினர் இளம் வாக்காளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தனர். இது தேர்தலே இல்லை. திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர்.வருங்காலங்களில் இடைத் தேர்தலை ஏலம் விட்டுவிடுங்கள். இதெல்லாம் தெரிந்து தான் அதிமுக பின்வாங்கியது. இது பண நாயகத்தின் வெற்றி; ஜனநாயகத்தின் மரணம்” என்று குற்றம் சாட்டினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
