செம... ரோட்டில் பள்ளமா? போட்டோ எடுத்து அனுப்பினா உடனடி தீர்வு... நம்ம சாலை செயலி!!

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. திடீர் பள்ளங்கள், பிளவுகள் சமீபகாலமாக சாலைகளில் ஏற்படத் தொடங்கியுள்ளன. வாகன ஓட்டிகள் இதனால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறையினரால் சரிசெய்யப்படுவதற்கு முன் அந்த் பள்ளத்தால் சில விபத்துக்களும்,, அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடுகின்றன. இவைகளை களையும் வகையில் நம்ம சாலை செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலைகளில் ஏற்படும் திடீர் பள்ளங்கள், குறைபாடுகளை பதிவிட்டால் 24 மணி நேரத்திற்குள் அதாவது ஒரே நாளில் சரிசெய்யப்பட்டு விடும்.
‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற முழக்கத்தை முன் வைத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘நம்ம சாலை’ செயலியின் பயன்பாட்டை சென்னையில் இன்று தொடங்கி வைத்தோம்.
— Udhay (@Udhaystalin) November 1, 2023
சாலையில் பள்ளம் உள்ளிட்ட சேதங்கள் இருப்பின், பொதுமக்களே அதனைப் புகைப்படம் எடுத்து ‘நம்ம சாலை’ செயலியில்… pic.twitter.com/u1PuzQqfn9
சாலைகளின் குறைபாடுகளை மக்களின் துணையோடு உடனடியாக செப்பனிடும் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட “நம்ம சாலை“ என்ற புதிய மென்பொருள் மற்றும் கைபேசி செயலியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். செயலியை தொடங்கி வைத்து அவர் ஆற்றிய உரையில் “ தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான சாலை உள்கட்டமைப்பு அவசியம். கிராமப்புற பொருளாதாரத்தினை மேம்படுத்திடவும், புதிய வாழ்வாதார வாய்ப்புகளைத் உருவாக்கவும், சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்வதிலும் சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்படி தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை, உருவாக்கி, பராமரித்து வருகிறது. தமிழ்நாடு “விபத்தில்லா மாநிலம்“ என்ற முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டத்தினை செயல்படுத்த, “பள்ளங்களற்ற சாலை” என்ற இலக்கினை அடைவற்கு ஏதுவாக, பொதுமக்களின் துணையோடு கண்டறியப்படும் சாலையில் ஏற்படும் பள்ளங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிசெய்யப்பட வேண்டும்.
மானியக் கோரிக்கையின் போது, பிரத்தேயக கைபேசி செயலி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது “நம்ம சாலை“ என்ற மென்பொருள் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டது. “ இதன் மூலம் நெடுஞ்சாலைத்துறையினால் பராமரிக்கப்படும் சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் கைபேசி செயலி மூலம் புவி குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் அச்சாலைக்குரிய பொறியாளருக்கு செயலி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, குறித்த காலக்கெடுவுக்குள் பள்ளங்களை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் சாலைகள் செப்பனிடப்பட்ட விவரம் புகைப்படங்களுடன், “நம்ம சாலை“ செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் புகார் அளிக்கும் பொதுமக்களின் அலைபேசிக்கு அனுப்பப்படும். இச்செயலி மூலம் பள்ளங்கள் குறித்து தெரிவிப்பதுடன் மட்டுமில்லாமல், பேரிடர் காலங்களில் மரம் விழுதல், வெள்ளப்பெருக்கு போன்றவற்றைக் குறித்தும் புகார்கள் அளிக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!