ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
எத்தனை கட்டுப்பாடுகள் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டபோதிலும் விமானம், கப்பல்கள் மூலம் தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக போதைப்பொருட்கள் கடத்தலும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பெரும் கவலையை அளிப்பதாக பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அந்த வகையில் நைஜீரியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கென்யாவிலிருந்து வந்த இளம் பெண் கால்களில் அணிந்திருந்த ஷூக்களில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதன் பேரில் அப்பெண்ணை விமான நிலையம் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக போதைப்பொருட்கள் எடுத்து வந்தார்கள்? போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்று பல வகையான கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
