சிதம்பரம் கோயில் கோபுர உச்சியில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக்கொடி!
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் சுதந்திரத் தினத்திலும், குடியரசு தினத்திலும் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

மேற்கு கோபுரம் வாயில் முன் மண்டபம் அருகே, நாடு சுதந்திரம் அடைந்ததைக் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர் தீட்சிதர்கள். சுதந்திரத் தினமான இன்று காலை கோயிலில் முதல் கால பூஜை முடிந்தவுடன் கனக சபையில் நடராஜர் பாதத்தின் கீழ் தேசியக் கொடியை வெள்ளி தட்டில் வைத்து தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகளைச் செய்தனர்.

நாட்டின் நலனுக்காகவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் பூஜை செய்யப்படுகிறது. பின்னர், பிரகாரம் வழியாக மேள, தாளம் முழங்கியவாறு தேசியக் கொடியை ஊர்வலமாக கொண்டு வருவர். 152 அடி உயரமுள்ள கிழக்கு ராஜகோபுர உச்சியில் தேசியக் கொடியை தீட்சிதர்கள் ஏற்றி இனிப்பு வழங்கினர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
