செம... தமிழகத்தில் முதன்முறையாக இயற்கை எரிவாயு பேருந்துகள்!
தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகள் டீசல் மூலமே இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாற்று ஏற்பாடாக இயற்கை எரிவாயு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயு பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மார்ச் 6ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விரைவில் சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி தொடங்கப்படும் .

அரசு பேருந்துகளில் சிஎன்ஜி வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் முதன்முறையாக, ராமநாதபுரத்திலிருந்து பெரியபட்டினத்திற்கு இயக்கப்படும் டவுன் பஸ் மற்றும் ராமநாதபுரத்திலிருந்து திருஉத்தரகோசமங்கை வழியாக சாயல்குடிக்கு இயக்கப்படும் ஒரு பேருந்து இவை இரண்டும் முழுக்க, முழுக்க சிஎன்ஜியில் மட்டுமே இயங்கக்கூடிய வகையில் இன்ஜின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளில் இருந்த டீசல் டேங்க் அகற்றப்பட்டு 7 கிலோ எடையளவு எரிவாயு நிரப்பக்கூடிய வகையிலான 7 சிலிண்டர்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் ஜூன் 13ம் தேதி நடந்த நிலையில் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் எரிபொருள் செலவு குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுதல் தவிர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வகையான பேருந்துகளுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
