விஞ்ஞான ரீதியாக நவராத்திரி கொண்டாடுவதற்கான விளக்கம் இது தான்! | நவராத்திரி ஸ்பெஷல்

 
வசந்த நவராத்திரி
நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாதம் அமாவாசை திதி தொடங்கி தசமி திதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்களில் முதல் 3 நாட்கள் துர்காவையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் போற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதிகம். துர்க்கையின் 9 அவதாரங்களையும் ஒவ்வொரு நாளும் போற்றி பக்தியுடன் மனமுருகி பிரார்த்தனை செய்திட வேண்டும். 

வசந்த நவராத்திரி
இந்து மதத்தில் அனைத்து பண்டிகைகளும், விழாக்களும் அறிவியல் காரணங்களுடன் தொடர்புடையவை. நவராத்திரியும் அப்படியே. நவராத்திரி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வருகிறது. இந்த காலம் தான் இலையுதிர்காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாறும் நேரம். பருவநிலை  மாற்றத்தின் காரணமாக, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் காலம் இது.

பொதுவாகவே குளிர் காலம் உடலின் நோய் எதிர்ப்பு செல்களையும்,கொழுப்பின் கலவையையும் பாதிப்படைய செய்வதாக அறிவியல் விஞ்ஞானம் கூறுகிறது. அந்த வகையில் இந்த மாதங்களில் பகல் குறைவாகவும் இரவு அதிகமாகவும் காணப்படும். இதனால் வடக்கு பகுதியில் குளிர் அதிகரிக்கும். இந்த குளிரால் மனித உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நோய்களுக்கு காரணமாகி விடுகின்றன. அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவே இந்த நவராத்திரி விரதங்கள் . 

இந்து முறைப்படி தொடர்ந்து 9 நாட்களும் மக்கள் இடைவிடாத விரதத்தில் இருக்கிறார்கள். குளிர்காலத்தில் விரதம் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதாக கரையும்.  உடல் எடை குறைக்க போராடுபவர்கள் இந்த 9 நாள் விரதத்தை நிச்சயம் எடை குறைப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன் விரதம் இருக்கும் காலகட்டத்தில் சாத்வீக உணவை உட்கொள்ள வேண்டும். தூய்மையான, இயற்கையான, உயிர்ப்பான, சுத்தமான, ஆற்றல் மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  பழங்கள், தயிர், கல் உப்பு, பருவகால காய்கறிகள் மற்றும் மல்லி மற்றும் கருப்பு மிளகு இவைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

வசந்த நவராத்திரி

இந்த வகை உணவுகள் மனதிற்கு  அமைதியான உணர்வுகளை வழங்குகின்றன. அத்துடன் உடலில் சூட்டை அதிகப்படுத்தும் வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களையும் தவிர்க்க வேண்டியது அவசியம். இதனால் செரிமான மண்டலம் சுத்தமாவதோடு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இந்த விரதம் கொழுப்பை குறைத்து குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. செரிமான மண்டலத்தை பலப்படுத்துகிறது. நவராத்திரியில் விரதம் இருந்து அம்பிகையின் அருள் பெறுவதோடு உடல் ஆரோக்கியத்தையும் மீட்டெடுப்போம்

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web