என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்துள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. 2026 மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திரவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டர் நடந்த பகுதியில் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
