நயன், விக்கி 2 வது கல்யாண நாள்... மாஸ் போட்டோஸ், வீடியோ!

 
நயன் விக்கி
 

2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். இதை தவிர சில படங்களை தயாரித்துள்ளார் நெற்றிக்கண், கூழாங்கல், ராக்கி போன்ற படங்களை தயாரித்துள்ளார். மேலும் பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான நயனதாராவை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.  2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி விக்னேஷ் சிவன் -நயன்தாராவிற்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.இந்த நிலையில், தனது மனைவி நயன்தாரா மற்றும் இரண்டு மகன்களோடு வெளிநாட்டில் சுற்றுலா மேற்கொண்டுள்ள விக்னேஷ் சிவன், தங்களது இரண்டாம் ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர். 
 நயன் விக்கி

திருமண நாளை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோவை ஷேர் செய்த விக்கி, அந்த போஸ்டில், “என் காதலுக்கு 10 ஆண்டுகள், கணவன் மனைவியாக 2 ஆண்டுகள். இந்த காதலுக்கு எனக்கு கிடைத்த பரிசுகள் உயிர், உலகம். ல வ் யூ தங்கமே, இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்”  என குறிப்பிட்டுள்ளார்.  இந்த போஸ்டுக்கு கீழ் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை  பதிவிட்டு  வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web