குக்கே சுப்பிரமணியாவில் நயன்தாரா–விக்னேஷ் சிவன் சர்ப சமஸ்கார பூஜை!
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குக்கே சுப்பிரமணியா கோவில், தென்இந்தியாவின் முக்கிய நாக ஷேத்ரங்களில் ஒன்றாகும். பாம்பு வடிவில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியரை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
Nayanthara & Vignesh Shivan Visit Kukke Subramanya Temple | ಕುಕ್ಕೆ ಸುಬ್ರಹ್ಮಣ್ಯಕ್ಕೆ ಭೇಟಿ ನೀಡಿ ಸರ್ಪ ಸಂಸ್ಕಾರ ಸೇವೆ ನೆರವೇರಿಸಿದ ನಯನ ತಾರಾ ದಂಪತಿ! | N18S #nayanthara #VigneshShivan #kukkesubramanyatemple #News18Kannada pic.twitter.com/J6NnQezXxF
— News18 Kannada (@News18Kannada) November 12, 2025
இந்த புனித ஸ்தலத்துக்கு நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்றுள்ளார். கோவில் நிர்வாகம் அவர்களுக்கு பூரண கும்ப வரவேற்பு அளித்தது. பின்னர் இருவரும் கோவிலில் நடைபெறும் “சர்ப சமஸ்கார பூஜை”யில் பங்கேற்றனர். திருமணத் தடைகள், தோல் நோய்கள், தொழில் தாமதங்கள் போன்றவை நீங்க இந்த பூஜை சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர் பூஜையில் பங்கேற்ற காட்சிகள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பக்தர்களும் ரசிகர்களும் அதை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
