உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வாய்ப்பை இழந்தார் நீரஜ் சோப்ரா... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
நீரஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 8வது இடத்தைப் பிடித்து நீரஜ் சோப்ரா பதக்க வாய்ப்பை இழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 20வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடந்தது. இதில் இறுதிப்போட்டியை எட்டுவதற்கான தூரம் 84.50 மீட்டர் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 84.50 மீட்டர் தூரத்தை எட்ட வேண்டும் அல்லது அதிக தூரம் வீசும் டாப்-12 வீரர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைவார்கள். 

நீரஜ் சோப்ரா

இதில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 84.85 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து எளிதில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 

இந்நிலையில் இன்று பதக்கத்துக்கான இறுதிப்போட்டி நடந்த நிலையில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மிக மோசமாக செயல்பட்டார். முதல் வாய்ப்பில் 84.03 மீட்டர் தூரம் வீசினார் நீரஜ் சோப்ரா. தொடர்ந்து மற்ற வாய்ப்புகளில் அவர் 84.03 மீட்டருக்கும் குறைவாகவே வீசினார். இதனால் நீரஜ் சோப்ராவின் அதிகபட்சம் 84.03 மீட்டராக எடுத்துக்கொள்ளப்பட்டது .

நீரஜ் சோப்ரா

இதனால் நீரஜ் சோப்ரா 8வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறினார்.  மற்றொரு இந்திய வீரர் சச்சின் யாதவ் 86.27 தூரம் வீசி 4வது இடம் பிடித்த்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?