நீட் தேர்வு உயிரிழப்புகள்... 15 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்!

 
நீட்

நாடு முழுவதுமாக மருத்துவ படிப்புக்களுக்காக  நடத்தப்படும்  நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை 2 மாதங்களில் வெளியிடும்படி மத்திய  அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 17 வயது நீட் பயிற்சி மாணவி 2023 ம் ஆண்டு சந்தேகத்துக்கு இடமான முறையில் விடுதியில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீட்

இதையடுத்து அவரது மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாணவி மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.  அத்துடன்  நீட் உயிரிழப்புகளை தடுக்க நாடு முழுவதும் விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கி தீர்ப்பளித்தது. அதன்படி நீட்பயிற்சி மையங்களை முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு முன்னதாக 2  மாதங்களில் அதற்கான விதிமுறைகளை வகுத்து அமல்படுத்த வேண்டும்.
பயிற்சி மையங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய  அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீட்

 விதிமுறைகள் வகுக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட விபரங்கள் குறித்து 3 மாதங்களில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய  அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து உரிய மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்பது உட்பட 15 பரிந்துரைகளை வழங்கி உச்சநீதிமன்றம் விரிவான தீர்ப்பு அளித்துள்ளது. இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?