நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு?! பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்கள்!!

 
நீட் நுழைவுத்  தேர்வு

இந்தியா முழுவதும் மருத்துவப்படிப்புக்களை  படிக்க நீட் தேர்வு எழுத வேண்டியது கட்டாயம். நடப்பாண்டில் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுகள் மே 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  நடைபெற உள்ளது.  இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து கொள்ள முடியும்.  அந்த வகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வுக்கான மையங்கள் குறித்த தகவல்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

நீட்தேர்வு

தேர்வுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, https://Neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப  எண், பிறந்த தேதி  இவைகளை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தியாவில் 2023-24ம் கல்வியாண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு  மே 7ம் தேதி நடைபெற உள்ளது

நீட் தேர்வு

. இதில், நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தமிழ். ஆங்கிலம் உட்பட  13 மொழிகளில்  மொழிகளில் அவரவர் தாய்மொழியிலோ அல்லது ஏதேனும் ஒரு மொழியிலோ  தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம்  499 நகரங்களில் உள்ள வெவ்வேறு மையங்களில் மே 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 05:20 மணி வரை நீட்தேர்வுகள்  நடைபெற உள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web