மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம்.. கழிவறை மீது அறுந்து விழுந்த மின் கம்பியை பிடித்த முதியவர் உயிரிழப்பு!

 
மின்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ,தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் பூக்கடை வியாபாரி குமரேசன்(70) இவர் வீட்டின் பின்புறமாக அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேலே அருகில் உள்ள மதன்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பி நேற்று நள்ளிரவில் பெய்த மழையின் காரணமாக  குமரேசன் வீட்டின் கழிவறை மீது அறுந்து விழுந்துள்ளது.
மின்சாரம்

இதை கவனிக்காமல் காலை கழிவறை சென்ற குமரேசன் கவன குறைவால்  மின்கம்பியை கையில்  பிடித்ததில்  மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய போலீசாரிடம்  புகார் அளித்தனர். அந்த புகாரில், குடியிருப்பு பகுதியில் மூன்று ஆண்டுகளாக ஆபத்தான முறையில் செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பியை மாற்றி அமைக்க கோரி மின்துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள் முதியவர் உயிரிழப்புக்கு மின் துறை அலுவலர்களே காரணம் என்றும் மின்சார துறை உயர் அதிகாரிகள் வந்து இதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இறந்தவரின் உடலை ஒப்படப்போம் என கூறி உறவினர்கள் மற்றும் அப்பகுதி  மக்கள் சடலத்தை எடுக்க விடாமல் தடுத்தனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு இதற்கான நடவடிக்கை எடுப்பதாக மின்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததின் பெயரில் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!