இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை!

 
ஆசிரியர்கள்


 
 இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் உட்பட  மற்ற  கோரிக்கைகள் குறித்து  தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை செப்டம்பர் 11ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு  ஆசிரியர் சங்கங்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

36,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இதில், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், இந்த கூட்டத்தில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது குறித்து ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  

ஆசிரியர்கள்


 2009ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய  முரண்பாடு இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய பேசுபொருளாக இருக்கும். இதனால் சுமார் 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம்  தொடர்ந்து உண்ணாவிரதங்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் இவற்றை அறிவித்து வருகிறது 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?