யூரோ 2024: நெதர்லாந்து போராடி வெற்றி!

 
நெதர்லாந்து
  

யூரோ 2024 கால்பந்து போட்டிகள் ஜெர்மனியில்  நடைபெற்று கொண்டிருக்கிறது.  நேற்று மாலை 6.30 மணிக்கு ஹேம்பர்க்கில் நடந்த போட்டியில் போலந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. போலந்து கேப்டன் ராபர்ட் லெவண்டோஸ்கி காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் போலந்து அணியை நெதர்லாந்து எளிதாக வென்றுவிடலாம் என எதிர்பார்த்திருந்தது. தொடக்கத்திலேயே 16வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில்  போலந்து அணிக்கு முதல் கோல் விழுந்தது. நெதர்லாந்து வீரர்களுக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி பேரதிர்ச்சியாக இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் நெதர்லாந்து அணி 29வது நிமிடத்தில் கோடி கேக்போ கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.  

யூரோ

இறுதியில் முதல் பாதி 1-1 என முடிவுக்கு வந்தது. போலந்து 2 வது பாதியில் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில மாற்றங்களைச் செய்தது.  நெதர்லாந்து அணியும் தொடர்ந்து முயற்சி செய்தும்  வெற்றிக்கான 2 வது கோலை அடிக்க முடியவில்லை.   90 நிமிடத்தில் அவர்கள் அடித்த 21 ஷாட்களில் 4  மட்டுமே இலக்கை நோக்கி அடிக்கப்பட்டன. 14 ஷாட்களை கோலுக்கு வெளியேவே அடித்தார்கள்  இதனால்  நெதர்லாந்து பயிற்சியாளர் ரொனால்ட் கூமணும் சிலபல மாற்றங்கள் செய்தார்.இதன் பிறகு  83வது நிமிடத்தில் வோட் வெகோர்ஸ்ட் இடது பக்கமிருந்து வந்த பந்தை அற்புதமாக கோலாக மாற்றினார்.  அதுவே அந்த அணிக்கு வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.

போலாந்து அணி 2 வது கோலுக்கு முயற்சி செய்தும் அவர்களால் அதை அடிக்க முடியவில்லை. இறுதியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.   
இரவு 9.30 மணிக்கு ஸ்டட்கார்ட் அரேனாவில் ஸ்லொவேனியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. சி பிரிவில் இங்கிலாந்து, செர்பியா போன்ற அணிகள் இருந்ததால் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது டென்மார்க் அணிக்கு அவசியம். அதற்கு ஏற்ப ஆட்டத்தின் 17வது நிமிடத்திலேயே அந்த அணிக்கு முதல் கோல் விழுந்தது. ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

யூரோ

இன்றைய போட்டிகள்:


ஜூன் 17, மாலை 6.30 மணி: ரொமேனியா vs உக்ரைன்
ஜூன் 17, மாலை 9.30 மணி: பெல்ஜியம் vs ஸ்லோவேகியா
ஜூன் 18, அதிகாலை 12.30 மணி: ஆஸ்திரியா vs ஃபிரான்ஸ்

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!