கலர், கலரா ஆவின் பால் பாக்கெட்டுகள் அறிமுகம்!!

 
ஆவின்

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆவின் பால் கொள்முதல் மற்றும் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம்  பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முண்ணனியில் இருந்து வருகிறது. இந்நிறுவனம்  பொதுமக்களின் நலனுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையில்  அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் டிலைட் பால், சமன்படுத்தப்பட்ட பால், நிறை கொழுப்பு பால் ஆகிய  3 வகையான பால் வகைகளை விற்பனைக்கு கொண்டு வர ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து   ஆவின் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆவின்

அதில்   சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பால் விற்பனை தினமும்  15 லட்சம் லிட்டரும் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனை மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ30 கோடி   அளவில் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம்  ழுமுவதும் 10000 க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம்  ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்  பால் மற்றும் பால் உபபொருட்களின் தேவை அதிகம் உள்ள  பகுதிகளில்  விற்பனை நிலையங்களை அதிகரிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா பகுதிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய பால் மற்றும் பால் உபபொருட்களை அறிமுகம் செய்து வருகிறது.  

ஆவின்
 பசும்பாலில் சராசரியாக 3% முதல் 4% கொழுப்புச் சத்தும் 7.5% முதல் 8.5% வரை இதரச்சத்துக்கள் இருக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதரச்சத்துக்கள் கொண்ட ஆவின் டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கொழுப்புச் சத்து குறைவான பால் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு  சமன்படுத்தப்பட்ட பால் 3.0% கொழுப்பு மற்றும் 8.5% இதரச்சத்துள்ள நீல நிற பாக்கெட்டுகளிலும் மற்றும் இரு முறை சமன்படுத்தப்பட்ட பால் 1.5% கொழுப்பு மற்றும் 8.5% இதரச்சத்துள்ள இளஞ்சிவப்பு பாக்கெட்டுகளிலும் வழங்கப்படுகிறது.  அதிக கொழுப்புச் சத்தை விரும்பும்   வாடிக்கையாளர்களுக்கு நிறை கொழுப்பு பால் 6.0% கொழுப்பு மற்றும் 9.0% இதரச்சத்துள்ள ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே மக்களின் தேவையை கருதியும், மருத்துவ ரீதியாக ஏற்புடைய அளவில் நியாயமான விலைக்கு இவ்வகை பால் பாக்கெட்டுகள் எந்தவித தங்கு தடையும் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. பால் அட்டைதாரர்களுக்கு டிலைட் பால், சமன்படுத்தப்பட்ட பால், நிறை கொழுப்பு பால் மற்றும் பிற பால் வகைகள் அட்டைகள் மூலமும் தேவைப்படும் அளவிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web