புதிய பாலம் இடிந்து விழுந்து விபத்து... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
சீனா
 

சிச்சுவான் மாகாணத்தை திபெத்துடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட ஹாங்கி என்ற புதிய பாலம் சில நாட்களுக்கு முன்தான் திறக்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சியாக, திபெத்தை நோக்கிய தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்த அந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. மலையில் ஏற்பட்ட நிலச்சரிவே இந்த விபத்துக்குக் காரணமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷுவாங்ஜியாங்கோ நீர்மின் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த இடிபாடால் பாலத்தின் ஒரு பகுதி நேராக ஆற்றுக்குள் சரிந்தது.

நல்ல அதிர்ஷ்டமாக, அந்த நேரத்தில் யாரும் பாலத்தில் பயணம் செய்யவில்லை என்பதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து 758 மீட்டர் நீளமுள்ள ஹாங்கி பாலத்தில் அனைத்து போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் திறக்கப்பட்ட பாலம் இவ்வளவு விரைவில் இடிந்து விழுந்தது குறித்து சீன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!