12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் புதிய மாற்றம்...செப்.15க்குள் கருத்து தெரிவிக்க உத்தரவு!

 
தேர்வு

 

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்து செல்ல வேண்டிய மாணவர்களுக்கு, அவர்கள் தற்போது கல்வி படித்து வரும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

புதிதாக தேர்வு மையங்களைப் பெற விரும்பும் பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும் .இந்த உத்தரவுக்கு மாணவர்கள் விவரங்களுடன் கூடிய கருத்துருவை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முடிவுகள்

இந்த அறிவிப்பு, மாநிலம் முழுவதும் உள்ள பல லட்சம் பள்ளி மாணவர்களுக்கு பயண சிரமத்தை வெகுவாக குறைக்கிறது. கடைசி நேர டென்ஷன் மற்றும் பரபரப்பையும் குறைத்து பாதுகாப்பாக தேர்வு எழுத வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?