பிளஸ் 2 பொது தேர்வு அனுமதி சீட்டுக்கு புதிய நிபந்தனை.. பள்ளி கல்வித்துறை உத்தரவு!

 
டிபிஐ பள்ளி கல்வித்துறை டிபிஐ பள்ளி கல்வித்துறை

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு பதிவு செய்தும் தேர்வு எழுத வராத மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், பள்ளிக்கு முறையாக வருகை புரியும் மாணவர்களுக்கே அனுமதி சீட்டு வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வுக்கு பதிவு செய்யும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காரணங்களால் தேர்வில் பங்கேற்கவில்லை. குறிப்பாக, கொரோனா காலம் உள்ளிட்ட ஆண்டுகளில் மிகக் குறைந்த வருகையிலும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெற்றனர். ஆனால் பெரும்பாலும் தேர்வுக்கு வராததால், தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

ஆசிரியர் அரசு பள்ளி வகுப்பறை மாணவர்கள்

இதனைத் தடுப்பதற்காக, நடப்பு கல்வியாண்டு (2025-26) முதல் பள்ளி வருகை பதிவுகளை ஆய்வு செய்து, வகுப்புகளுக்கு முறையாக வருகை தரும் மாணவர்களுக்கே பொது தேர்வு அனுமதிச் சீட்டு வழங்கப்பட உள்ளது.

அதிகாரிகள் தகவலின்படி:

2022–23ல் 8.51 லட்சம் மாணவர்களில் 50,674 பேர் மொழித் தேர்விற்கு வரவில்லை
2023–24ல் 7.80 லட்சம் மாணவர்களில் 12,364 பேர் தமிழ்த் தேர்விலும் 12,696 பேர் ஆங்கிலத் தேர்விலும் பங்கேற்கவில்லை
2024–25ல் 8.02 லட்சத்தில் 11,430 பேர் தமிழ்த் தேர்வுக்கு வராதது பதிவாகியுள்ளது

மாணவிகள் அரசு பள்ளி

இந்தப் புதிய நடவடிக்கையின் மூலம் மாணவர்களில் தேர்வு அச்சம் நீங்கவும், ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்கள் மூலம் வழிகாட்டுதல் வழங்கி தேர்வில் பங்கேற்பை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

வருகை குறைவான மாணவர்களும் பயமின்றி தேர்வுக்கு வர தேவையான உதவி மற்றும் ஊக்குவிப்பும் வழங்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!