எச்சரிக்கை... ஆண்களுக்கு புது ஆபத்து.. செல்போன் ஆப் மூலம் பணம் பறிக்கும் கும்பல்.. எப்படி தெரியுமா?

 
Grindr

நவீனமயமாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தற்போது கழிவறையில் இருந்துகொண்டுகூட உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடிகிறது. செல்போனின் வருகையால் தகவல் தொழில்நுட்பத்தின் வேகம் அதிகரித்துள்ளது. 

இந்த வளர்ச்சியால் ஏராளமான நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதற்கு ஈடாக தீமைகளும் இல்லாமல் இல்லை. இதற்கு உதாராணமாக மற்றொரு ஆபத்து வந்துள்ளது. தற்போதைய இளைஞர்கள் மத்தியில் ‘கிரைண்டர் ஆப்’ (Grindr )என்ற செயலி வேகமாக பரவி வருகிறது. இது ஓரின சேர்க்கையாளர்களுக்கான செயலி என்று கூறப்படுகிறது. 

கிரைண்டர்

இந்த செயலியை பதிவிறக்கம் செய்து ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்கின்றனர். பின்னர் அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வரவைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம், செல்போன் மற்றும் நகைகளை பறித்து கொள்கின்றனர். 

சமீபத்தில் வியாபார விஷயமாக நெல்லை மாவட்டம் புளியங்குடி வந்த வியாபாரி இந்த மொபைல் செயலியை பயன்படுத்தியுள்ளார். அப்போது இந்த செயலியால் காட்டுப்பகுதிக்கு செல்கையில் அங்கு மறைந்து இருந்த மர்ம நபர்கள் அவரை சுற்றிவளைத்தனர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்துள்ளனர்.

ஆனால், இது தொடர்பாக வெளியில் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். ஆனால், இது குறித்து போலீசார் மோப்பம்பிடித்து மோசடி பேர்வழிகள் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

கிரைண்டர்

இதே போன்று இச்செயலியால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் வெளியில் சொல்ல முடியாமல் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆகவே இது போன்ற மாணவர்கள், இளைஞர்கள் வாழ்க்கையை கெடுக்கும் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web