செம... அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகள்... தமிழ்நாடு விண்வெளி தொழிற் கொள்கையில் புதிய முடிவு!

 
தமிழ்நாடு


 
 
தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடர்  ஜூன் 20ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் தொழில் மற்று முதலீட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில்  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 
வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் தமிழ்நாடு பெரும் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.  இத்துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்து அதிக அளவிலான முதலீடுகளை பெறும் நோக்கில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும் எனக் கூறியிருந்தார்.  தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்தவும், அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் மாநிலத்தில் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில் வழிமுறைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் இக்கொள்கையில் வகுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

தமிழ்நாடு
விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப்பட்டது. அதன்படி  குலசேகரப்பட்டினத்தை சுற்றி உள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஸ்பேஸ் பே ஆக ஊக்குவித்து வளர்ச்சி பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என தமிழக அரசு  முடிவு செய்துள்ளது.
விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்வெளி கொள்கையை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. தற்போது அதற்கான வரைவு அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. வலுவான தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் இவைகளை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அரசு வேலை

விண்வெளிக் கொள்கை  தொழிற்துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விண்வெளித் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மற்றும் விரிவாக்க தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்கள் விண்வெளி தொழில் விரிவாக்க மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web