புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்...!!

 
அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி:  மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சதீவு பகுதிகளில்   வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால்  இன்றும் நாளையும் தமிழகம்  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நீலகிரி, கோவை,   திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மஞ்சள் அலர்ட்


 இந்நிலையில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக   இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக, கேரளா, மாஹே, தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மாவட்ட வாரியாக ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்!!
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால்  கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும். கடலோர பகுதி சீற்றத்துடன் காணப்படும் . அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பும்  கர்நாடகாவில்   தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு ரூரல், சாமராஜநகரா, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, குடகு, கோலார் மற்றும் ராமநகரா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web