இன்று முதல் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய மின் கட்டணம்! அமலுக்கு வந்தது!

 
மின்சாரம் ஸ்டாலின்

இன்று முதல், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குறைக்கப்பட்ட புதிய மின் கட்டண முறை அமலுக்கு வந்தது. கடந்த சில மாதங்களாக அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்களுக்கு அடுத்தடுத்து அதிகளவில் மின் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கேற்ப குறைக்கப்பட்ட மின் கட்டண முறை அமலுக்கு வந்தது.

assembly

இன்று நவம்பர் 1ம் தேதி முதல் அதிரடியாக பல மாற்றங்களை நடைமுறைக்கு வந்துள்ளன. அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குறைக்கப்பட்ட மின் கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில்‌ பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி2 I D- யை மின் கட்டண ஆணை எண் 7 நாள் 09.09.2022ல்‌ உருவாக்கியது. பத்து வீடுகள்‌ அல்லது அதற்கு குறைவாகவும்‌, மூன்று மாடிகள்‌ அல்லது அதற்கு குறைவாகவும்‌, உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப்‌ பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம்‌ ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்‌ 15 பைசாவிலிருந்து ஐந்து ரூபாய்‌ 50 பைசாவாக குறைக்கப்படும்‌ என்று அறிவித்திருந்தார்‌.  

மின்சாரம்

புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை பத்து வீடுகள்‌ அல்லது அதற்கு குறைவாகவும்‌, மூன்று மாடிகள்‌ அல்லது அதற்கு குறைவாகவும்‌, உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை 1E-ஐ அறிமுகப்படுத்தியும்‌ இக்குடியிருப்புகளுக்கு மின்கட்டணம்‌ ரூ.5.50/யூனிட்‌ என நிர்ணயித்தும்‌ 01.11.2023 முதல்‌ அமலுக்கு வருமாறு ஆணை எண்‌: 9, நாள்‌ : 31.10.2023 மூலம்‌ வெளியிட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web