தாலி கட்டியதும் புதுமாப்பிள்ளை கைது! கர்ப்பிணி காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் திருமணம்!

 
ரம்யா

போலீசார் கொஞ்சம் சுதாரித்திருந்தால், இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்றி இருக்கலாம். தாலி கட்டி முடித்து விட்டு, கிளம்பிய நிலையில், புதுமாப்பிள்ளையை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கழுத்தில் இருந்த மணமாலையைக் கூட கழற்றாத நிலையில், தன்னுடைய புது புருஷனை போலீசார் கைது செய்தது கண்டு தலைச்சுற்றி குழம்பி நின்ற மணப்பெண்ணும், பெண்ணின் குடும்பத்தினரும் விசாரணையில் மேலும் அதிர்ந்தனர்.  

ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணத்திற்கு முன்பே வரம்பு மீறியதால், கர்ப்பமான காதலியைக் கைகழுவி விட்டு, அவளது கர்ப்பத்தையும் நயமாக பேசி, கலைக்க வைத்து விட்டு, இப்போது எதுவும் நடக்காததைப் போன்று வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்திருக்கிறான் கடலூரைச் சேர்ந்த சுப்ரமணியன். இத்தனைக்கும் திருமணத்தை நிறுத்த கோரி, சுப்ரமணியனின் வீட்டு வாசலில் விடிய விடிய உட்கார்ந்து போராட்டம் நடத்தியிருக்கிறார் இளம்பெண். போலீசிலும் புகாரளித்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (31). மெக்கானிக்கா வேலை பார்த்து வரும் சுப்ரமணியனும், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ரம்யாவும் (29) கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதில் ரம்யா கர்ப்பம் அடைந்த நிலையில் கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக சுப்பிரமணி ஆசை வார்த்தை கூறி அதை கலைத்து உள்ளார்.

Lover

மேலும் கடந்த 22ம் தேதி விழுப்புரத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் வைத்து ரம்யாவை சுப்பிரமணி திருமணம் செய்து கொண்டார். பின்னர் விழுப்புரத்தில் அறை எடுத்து தங்கி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் சுப்ரமணியனுக்கு கடலூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திடீரென நிச்சயம் செய்யப்பட்டு நேற்று காலை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

இதனை அறிந்த ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியனை தேடி வந்த நிலையில், திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி பண்ருட்டியில் இரவு முழுக்க காதலன் வீட்டு முன்பு வாசலில் அமர்ந்து ரம்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Police-arrest

ஆனால் திருவத்திபுரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றதால் ஒவ்வொரு திருமணமாக சென்று அவரை தேடி வந்த நிலையில் அதற்குள் சுப்பிரமணிக்கு திருமணம் முடிந்து விட்டது.

மணக்கோலத்தில் கோயிலில் இருந்து வெளியே வந்த சுப்பிரமணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதன்பிறகு அவரிடம் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web