வைரல் வீடியோ... டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்ஸி !

 
ஜெர்சி

 ஜூன் 1ம் தேதி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்கள்  அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில்  நடைபெற உள்ளது.  இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உட்பட 20 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

 இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உட்பட 20 நாடுகள் கலந்து கொள்கின்றன. ஏ பிரிவில் இந்திய அணியும்,  பாகிஸ்தானும் இடம் பெற்றுள்ளது.  இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி  பிசிசிஐ மூலம்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை ஜெர்சி ஹெலிகாப்டரில் தொங்க விட்டு தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் வருவது போல வீடியோ ஒன்று வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. அந்த ஜெர்சியை  ரோகித் சர்மா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் பார்ப்பது போன்ற காட்சியும் அதில்  இடம்பெற்றுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web