புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... இன்றிரவு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில்  தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் நிலை உருவாகத் தொடங்கியுள்ளது.  

மழை

மேலும், காற்றின் வேக மாற்றம் மற்றும் கிழக்கு முதல் மேற்குத் திசை நோக்கி நகரும் மேகங்கள் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த  48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

கன மழை

அதன்படி இன்று இரவு  கரூர், திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் அவசர தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் .  புயல் சின்னம் வங்கக்கடலில் தென்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?