இன்று தமிழகம் முழுவதும் சொத்துக்களுக்கான புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி அமலுக்கு வந்தது!

 
பத்திரப்பதிவு

 தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி மற்ற பகுதிகளில் சொத்துக்களுக்கான புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு முத்திரை  விதிகள், 2010, விதி 4ன்படி ஒவ்வொரு வருடமும் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும். வழிகாட்டி மதிப்பினை சீரமைக்கவும், வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களையவும், புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலுக்கான நெறிமுறைகளை பதிவுத்துறைத்தலைவர் தலைமையிலான மதிப்பீட்டு குழு  கூடி வகுத்தளித்தது. 

பத்திரப்பதிவு


கலெக்டர்கள் தலைமையிலான துணைக்குழுக்களால் மதிப்பு நிர்ணயம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான துணைக்குழுக்கள் மே  முதல் வாரத்தில் கூடி மைய மதிப்பீட்டு குழுவின் அறிவுறுத்தல்களின்படி வரைவு சந்தை வழிகாட்டி தயாரிக்க அந்தந்த மாவட்டத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும், பொதுமக்களின் கருத்துக்களை கோருவதற்கான நடைமுறைகளையும் வகுத்தனர்.  


பொதுமக்களிடமிருந்து அறியப்பட்ட சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு மற்றும் விற்பனை புள்ளி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு துணைக்குழுக்களால் வரைவு வழிகாட்டிக்கு ஒப்புதல் அளித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அவ்விவரம் உள்ளூர் செய்தித்தாள்களில் கலெக்டர்களால் செய்திகள் வெளியிடப்பட்டன.  பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகளை தெரிவிப்பதற்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டன. மாவட்ட துணைக்குழு 3 வது முறையாக கூடி வரைவு சந்தை மதிப்பு வழிகாட்டியில்  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபணை மற்றும் கருத்துரைகளை பரிசீலினை செய்தது.  

பத்திரப்பதிவு
பதிவுத்துறைத்தலைவர் தலைமையிலான மைய மதிப்பீட்டுக்குழு 29.06.2024 அன்று மாலை 4 மணிக்கு  மாவட்ட துணைக்குழுக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, முரண்பாடுகள் களையப்பட்ட புதிய சந்தை மதிப்பு வழிகாட்டியினை ஜூலை 1 முதல்  நடைமுறைப்படுத்தப்படலாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web