இன்று புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு... பரபரக்கும் கர்நாடக சட்டசபை!

 
விதான் சவுதா

சமீபத்தில் கர்நாடகாவில் நடந்து முடிந்த  சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன்  வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் யார் என்ற இழுபறி நீடித்து வந்த நிலையில் சித்தராமையா  முதல்வராக  செயல்படுவார்  என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சனிக்கிழமை மே 20ம் தேதி  முதல்வராக சித்தாராமையா  பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை 3 நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சித்தராமையா அறிவித்திருந்தார்.  

விதான் சவுதா

இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதலாவது சட்டசபை கூட்டம் பெங்களூரு விதான்சவுதாவில் இன்று மே 22ம் தேதி திங்கட்கிழமை தொடங்கை மே 24ம் தேதி வரை  தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. 24ம் தேதி கட்சி தலைவர்களுடன் கார்கே முக்கிய ஆலோசனை 9 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக இருப்பார் என சித்தராமையா அறிவித்துள்ளார்.

விதான் சவுதா

அதன்படி, தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே தலைமையில் இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. முதல் 2 நாட்கள், அதாவது இன்றும், நாளையும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 224 எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்கின்றனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து, 3வது நாளான மே 24ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web