மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழா... ஜனாதிபதி முர்மூவை சுற்றி சுழலும் அரசியல்?!

 
நாடாளுமன்றம் மூர்மு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் பெயரில் சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி செலவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்முவை, கடந்த மாதம் 28ம் தேதி டில்லி சென்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். முதல்வரின் அழைப்பை ஏற்று, மருத்துமனை திறப்பு விழாவில் பங்கேற்பதாக ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக முதல்வர் கூறியிருந்தார். 

வருகின்ற மே 28ம் தேதி சர்வர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார், இதற்கு ஜனாதிபதி முர்முவை வைத்து திறக்காதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிட்டத்தட்ட அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக பல்வேறு விஷயங்களைக்கூறியும் ஜனாதிபதியாக இருந்தவர் இதற்குமுன் அழைக்கப்படாத விழாக்களின் பட்டியல்களை வெளியிட்டு வருகின்றது.  

ஸ்டாலின் மோடி

இந்நிலையில் கருணாநிதி நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அன்றைய தினம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் என்கின்றனர் டெல்லி வட்டாரத்தில்.

நாடாளுமன்றம் பாராளுமன்றம்

ஆனால் தமிழக அரசு வட்டாரத்தில், "ஜூன் 5ம் தேதி, ஜனாதிபதியின் சென்னை வருகை ரத்தானதாக அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை. அவர் வெளிநாடு பயணம் காரணமாக அந்த தேதியில் வரமுடியாமல் போனால், வேறு ஒரு தேதியில் ஜனாதிபதி சென்னை வருவார். மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்பார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள முதல்வர், தமிழகம் திரும்பியதும் இது குறித்து ஆலோசித்து உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கிறார்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web