ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும்... ஜப்பானில் திடீர் உத்தரவு!

 
சிரிப்பு

ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
சிரிப்பு என்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அது பற்றி ஜப்பானின் யமகட்டா பல்கலையில் சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இதய நோய் அபாயத்தை குறைக்க சிரிப்பு உதவுவதை உறுதிப்படுத்தியது. அதன்படி, யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு புதிய உத்தரவை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக மக்கள் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் சிரித்தால் மன அழுத்தம், பதற்றம் குறைந்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உத்தரவு தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் என்றும், நோய் அல்லது வேறு காரணங்களால் சிரிக்க முடியாதவர்களின் உரிமைகளை இந்த உத்தரவு மீறுவதாகவும் அங்குள்ள சில அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!