கொடைக்கானல், நீலகிரி சுற்றுதலா தலங்களில் அமலுக்கு வந்தது புதிய விதிமுறை!

 
நீலகிரி

கொடைக்கானல், நீலகிரி போன்ற சுற்றுலா தலங்களில் புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் சுற்றுலா தளங்களில் தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளன.  குறிப்பாக பிரபல சுற்றுலா தளங்களான நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப் பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.  

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதில், சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் சட்டவிரோதமாக, முறையாக அனுமதி பெறாமல் செயல்படும் தங்கும் விடுதிகளை கண்டறிய  சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

நீலகிரி

பொதுமக்களும் இது குறித்து புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னை உயர்நீதி மன்ற உத்திரவிற்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் Cottages/Home Stays / Lodges / Resorts ஆகியவற்றை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர், மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களை கொண்ட குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொடைக்கானல்

பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் Cottages/Home Stays/Lodges/Resorts குறித்த புகார்களை மாவட்ட ஆட்சியரகத்தில்  94427 72709 எண்ணில்  தெரிவிக்கலாம்.  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கு WP No:15120 of 2019-ன் உத்தரவின்படி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதியற்ற மற்றும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் சம்பந்தமாக புகார் அளிக்கலாம்.

இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்.18004250150-க்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் 7598578000 என்ற எண்ணிற்கு Whatsapp (புகைப்படம் மற்றும் வீடியோ) மூலமாகவும்  பொதுமக்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?