பகீர்.. ஜப்பானில் பரவும் புது வைரஸ்.. இரண்டே நாளில் மரணம் உறுதி.. பகீர் கிளப்பும் ஆய்வாளர்கள்!
ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2ம் தேதி ஜப்பானை தாக்கிய இந்த மர்ம நோயின் விவரம் வெளியாகி உள்ளது. ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (எஸ்.டி.எஸ்.எஸ் ) எனப்படும் இந்த வகை தொற்று நோயால்இதுவரை, மொத்தம் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 911 ஆக இருந்தது.

உடலின் பாகங்களை உண்ணக்கூடிய பாக்டீரியாக்களால் இந்த நோய் ஏற்படலாம். 48 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லும் ஆற்றல் கொண்டது. இந்த நோய் ஜப்பானில் பரவி வருகிறது.இதன் காரணமாக, குமட்டல் மற்றும் தொண்டை வலி ஏற்படும். சிலருக்கு, கால் வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் விரைவாக வரலாம்.இதைத் தொடர்ந்து சுவாசக் கோளாறு, உடல் உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ மகளிர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்கள் பேராசிரியர் கென் கியூசி, பெரும்பாலான இறப்புகள் 48 மணி நேரத்திற்குள் நிகழும் என்று கூறுகிறார்.நோயாளிக்கு காலையில் கால் பிடிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால், பிற்பகலில் அது முழங்காலுக்கு பரவி 2 நாட்களுக்குள் இறந்துவிடுவார்கள்.

ஜப்பானில் இந்த விகிதத்தில் நோய்த்தொற்றுகள் பரவுவதால், இந்த ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை 2,500 ஆக உயரக்கூடும். இறப்பு விகிதம் 30 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று கிகுசி கூறினார். இதனால் மக்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சமீபத்தில், ஜப்பான் தவிர, வேறு சில நாடுகளிலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!
