ஆகஸ்ட் 17ம் தேதி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லைபாளையங்கோட்டை கேடிசி நகரில் பணிபுரிந்து வருபவர் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ். ஜூலை 27ம் தேதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவின் செல்வகணேஷ் வீட்டிற்கு மாலை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்று, கவின் பெற்றோர் உட்பட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘கவினை தனி ஒருநபராக கொலை செய்திருக்க முடியாது. இதில் சம்மந்தப்பட்ட கூலிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கவின் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டராக உள்ள காசிபாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி ஆகஸ்ட் 17ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை புதிய தமிழகம் கட்சி சார்பில் நடத்த உள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
